தோனியை தாக்குப்பிடிப்பாரா கோலி?

சென்னை அணிக்கு இலக்காக 157 ரன்களை பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது.  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 35-வது லீக் போட்டி சார்ஜாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் 2 வது இடம் வகிக்கும் சென்னை…

சென்னை அணிக்கு இலக்காக 157 ரன்களை பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது. 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 35-வது லீக் போட்டி சார்ஜாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் 2 வது இடம் வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 10 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் தொடக்கம் முதலே சென்னை அணி வீரர்களின் பந்து வீச்சை மைதானத்தின் நாளா புறமும் சிதறடித்தனர். 2 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 35 பந்துகளில் தேவ்தத் படிக்கல் அரைசதமும், 1 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் கோலி அரைசதமும் விளாசி அசத்தினர். 53 ரன்கள் அடித்த நிலையில் பிராவோ பந்துவீச்சில் கோலி அவுட்டாகி வெவிலியன் திரும்பினார்.

இவரையடுத்து, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் 12 ரன்னுடன் வெளியேறினார். பின்னர் படிக்கல்லும் 70 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட்டாகினார். இவர்களை அடுத்து வந்த வீர்ர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் அதிகப்படியாக படிக்கல் 70 ரன்னும், கோலி 53 ரன்னும் அடித்திருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.