‘ரஞ்சிதமே, ரஞ்சிதமே’- விஜய் குரலில் வெளியானது வாரிசு பாடல் ப்ரோமோ

வாரிசு படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே, ரஞ்சிதமே எனும் முதல் பாடலின் ப்ரோமா வெளியாகி இணைத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு…

வாரிசு படத்தில் நடிகர் விஜய் பாடியுள்ள ரஞ்சிதமே, ரஞ்சிதமே எனும் முதல் பாடலின் ப்ரோமா வெளியாகி இணைத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

வாரிசு படத்தின் முதல் சிங்கிள் குறித்த அறிவிப்பு இந்த வாரம் வெளியாகும் என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில் இன்று காலை 10.45 மணிக்கு வாரிசு படத்தின் அப்டேட் இருக்கும் என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் டிவிட்டரில் தெரிவித்திருந்தது.

தொடர்ந்து 10.45 மணிக்கு வெளியிட்டிருந்த டிவிட்டர் பதிவில், படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடலின் ப்ரோமோ விடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய், மானசி பாடியுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கிடையே வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது ரசிகர்களை மிகுந்த உற்சாகமாக்கியுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் இந்த சிங்கிள் பாடலை வைரலாக்கி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.