தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றுள்ளது. 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு கடந்த 9ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது.
புதுச்சேரியில் பெரும்பான்மைக்கு 16 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி, காங்கிரஸ் – திமுக கூட்டணி, தவெக கூட்டணி என 3 முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 4 ஆயிரத்து 441 வாக்கு வித்தியாசத்தில் ரங்கசாமி வெற்றி பெற்றுள்ளார். ரங்கசாமி தலமையிலான என்ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.







