மோகன் லால் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற படம் திரிஸ்யம் – 2. அருமையான திரைக்கதை, காட்சியமைப்பு, வசனங்களால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படமென ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. மோகன் லாலின் அருமையான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது. பொதுவாக த்ரில்லர் திரைபடங்களை பொறுத்தவரை இரண்டாம் பாகம், முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்காது. ஆனால், திரிஸ்யம் 2 அதை பொய்யாக்கிவிட்டது. அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும் அளவிற்கு அமைந்துள்ளது.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் திரிஸ்யம் 2 திரைப்படத்தை பற்றி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நீங்கள் படத்தை பார்க்கவில்லை என்றால் முதல் பாகத்தில் இருந்து பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை தற்செயலாக கண்ட மோகன் லால் அவருக்கு பதிலளித்துள்ளார். “தங்கள் நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி திரிஸ்யம் 2 படத்தை பார்த்து அதை பற்றி கருத்து தெரிவித்ததற்கு நன்றி, உங்கள் கிரிக்கெட் வாழ்விற்கு வாழ்த்துக்கள்” என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.