முக்கியச் செய்திகள் தமிழகம்

தொடரும் இராமேஸ்வரம் மீனவர்கள் கைது

நடுக்கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

 

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க செல்ல போதிய மீன் பிடி தொழிலாளர்கள்
இல்லாத்தால் மீன் பிடி அனுமதி சீட்டு பெற்று சனிக்கிழமை மாலை சுமார் 300
க்கும் குறைவான படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் தலைமன்னாருக்கும் இரணைதீவுக்கும் இடையே இலங்கை கடற்பரப்பில்
மீன்பிடித்துக் கொண்டிருத்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ஒரு படகையும், அதிலிருந்த 6 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கிளிநொச்சி மாவட்டம் கிராஞ்சி கடற்பாடை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னாள் தமிழ்நாடு மீனவர்களிடம் இருந்து கைப்பற்றிய மீன்பிடி படகுகளை இலங்கை அரசு ஏலத்தில் விற்றது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், இலங்கை இராணுவத்தால் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீன் பிடி படகுகளை கைப்பற்றுவதும் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எஸ்பிபி குரலில் எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் பாடல்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்!

Jayapriya

தமிழக புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற இரண்டு பெண்கள்!

வேளாண் சட்டங்கள், வளர்ச்சி: குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!

Jeba Arul Robinson