முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒலிம்பிக் போட்டிகளில் சிலம்பத்தை சேர்க்க வலியுறுத்தல்

ஒலிம்பிக் போட்டிகளில் சிலம்பத்தை சேர்க்க வலியுறுத்தி இந்தியா உள்பட 7 நாடுகளில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் ஒரே நேரத்தில் மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

 

சிலம்ப கலையை உலகம் முழுவதும் பரப்பவும், ஒலிம்பிக்கில் சிலம்பக்கலை இடம் பெற
வலியுறுத்தியும், சிலம்பம் உலக சாதனைக்காக இந்தியா, இலங்கை, மலேசியா, சுவிட்சர்லாந்து,பிரான்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கு பெறும் சிலம்பம் முதன்முறையாக இன்று தூத்துக்குடியில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தியா சார்பில் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் பள்ளி
மைதானத்தில் சிலம்பம் சாதனையானது நடைபெற்றது. இதில் ஆயிரத்து 1100 மாணவ
மாணவிகள் கலந்துகொண்டு குழுவாகவும் தனிநபராகவும் சிலம்பம் சுற்றினா்.
சிலம்பாட்டத்தை தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர்
கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

 

மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வில் குழுவினர் ஒரே இடத்தில் சிலம்பம்
சுற்றினர் . தனிநபர்கள் மண்பானை மீது ஏறி நின்றும், சோடா பாட்டில் மீது ஏறி
நின்றும், கண்களை கட்டியவாறு தலையில் தண்ணீர் டம்ளரை வைத்துக்கொண்டும்
சிலம்பம் சுற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்கள் வராமல் தடுக்க நடவடிக்கை; அமைச்சர் சேகர்பாபு

EZHILARASAN D

நான் இயக்குநர் கவுதமிடம் சொன்னது நடந்தது-நடிகர் சிலம்பரசன்

Web Editor

ஓ.பி.எஸ்க்கான போலீஸ் பாதுகாப்பை திரும்பபெற வேண்டும்- புகார்

G SaravanaKumar