கேன்ஸ் திரைப்பட விழா 2023 சிவப்பு கம்பளத்தில் இயக்குனர் அட்லி மற்றும் மனைவி பிரியா இடம்பெற்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்படி உலகப் புகழ் பெற்ற இந்த ‘கேன்ஸ் திரைப்பட விழா’ பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் தொடங்கியது. இந்த விழாவானது 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 76வது ‘கேன்ஸ் திரைப்பட விழா 2023’ நாளையுடன் நிறைவுபெறுகிறது.
இந்த விழாவில் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஆவணப்படங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவை திரையிடப்படுகின்றன. இந்தியாவில் இருந்து 3 படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவில் பிரபலமாக இருக்கும் சிவப்பு கம்பளம் நிகழ்வில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா, முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் மற்றும் மிருணால் தாக்கூர், உள்ளிட்டோர் பங்கேற்று அலங்கரித்தனர்.
மேலும் மத்திய இணையமைச்சர் எல் முருகன் தமிழ் பாரம்பரிய அடையாளமான வேட்டி சட்டை அணிந்து சிவப்பு கம்பள வரவேற்பை அலங்கரித்தார். அதேபோல் இயக்குனர் அனுராக் காஷ்யப்பும் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்குகொண்ட புகைப்படங்களும் வெளியாகி ரசிங்கர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி அன்று தற்போது இந்திய அளவில், மிகப்பெரிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் அட்லியும் அவரது மனைவி பிரியாவும் கேன்ஸ் திரைப்பட விழா 2023 சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றனர். அப்போது அட்லி கருப்பு மற்றும் வெள்ளை நிற த்ரீ-பீஸ் சூட்டிலும், கருப்பு நிற ஷீரில், பதித்த புடவையிலும் தோன்றி விழாவை அலங்கரித்தனர். இந்த நட்சத்திர ஜோடியின் புகைப்படங்களை பிரபல நிறுவனமான தி ரூட் கேன்ஸில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதனையடுத்து இவ்விருவரின் ஸ்டைலான வருகையின் புகைப்படங்கள் இப்போது சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியுள்ளன.
https://twitter.com/TheRoute/status/1662013940417822720?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








