ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லை – இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி!

பரமக்குடியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு தற்போது சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார். நாட்டில் அடுத்தாண்டு மக்களவை…

பரமக்குடியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு தற்போது சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார்.

நாட்டில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம், பரமக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் காந்தி சிலை முன்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் என்.எஸ்.பெருமாள் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் திடீரென ஒரு மாநில அரசோ, மத்திய அரசோ பெரும்பான்மை இழக்கும் பட்சத்தில் உடனடியாக மறு தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகும். எனவே இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லை.

தேனி மக்களை உறுப்பினர் ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துள்ளது. மேலும் அவருக்கு மேல்முறையீடு செய்ய 30நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தி அவசரமாக முடிவெடுத்த அரசு இதில் எவ்வாறு முடிவெடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என அவர் தெரிவித்தார்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.