மாநாட்டை கொடியேற்றி தொடங்கி வைத்தார் ராமதாஸ்!

சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டை கொடியேற்றி தொடங்கி வைத்தார் ராமதாஸ்…

பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் “சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு” நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து மாநாட்டு திடலுக்கு ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

50 ஏக்கர் பரப்பரவில் நடைபெறும் இந்த மாநாட்டில் 3 லட்சம் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்தத்திற்கு 150 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு மேடையில் ஒன்றாக தோன்றிய பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் ரெட் பட்டனை அமுக்கி கொடியேற்றி சித்திரை முழு நிலவு மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.