பிரான்ஸ் செய்தி வெளியீட்டாளருடனான ஒப்பந்த விவகாரம்: கூகுள் நிறுனத்துக்கு 592 மில்லியன் டாலர் அபராதம்

கூகுள் நிறுவனம்-பிரான்ஸ் செய்தி வெளியீட்டாளர் ஆகியோருக்கிடையேயான ஒப்பந்த பிரச்னையில் கூகுள் நிறுவனத்துக்கு போட்டிகளுக்கான பிரான்ஸ் ஒழுங்குமுறை அமைப்பு 592 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் ஏகபோக தடுப்பு…

கூகுள் நிறுவனம்-பிரான்ஸ் செய்தி வெளியீட்டாளர் ஆகியோருக்கிடையேயான ஒப்பந்த பிரச்னையில் கூகுள் நிறுவனத்துக்கு போட்டிகளுக்கான பிரான்ஸ் ஒழுங்குமுறை அமைப்பு 592 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் ஏகபோக தடுப்பு முகமை அதிகாரிகள் கூகுள் நிறுவனம் பல்வேறு சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துவதாக கூறியுள்ளனர்.
பிரான்ஸ் ஏகபோக தடுப்பு முகமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்ட தற்காலிக உத்தரவில், செய்தி வெளியீட்டாளர்களுடன் மூன்று மாதத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால், இந்த உத்தரவை கூகுள் மதிக்காததால் அபராதம் விதிப்பதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து கூகுள் நிறுவனத்துக்கு போட்டிகளுக்கான பிரான்ஸ் ஒழுங்குமுறை அமைப்பு 592 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. மேலும் செய்தி வெளியீட்டாளர்களுக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்படும் என்று இன்னும் இரண்டு மாதத்துக்குள் செய்தி வெளியீட்டாளர்களுடன் எந்த ஒரு ஒப்பந்தமும் மேற்கொள்ளா விட்டால், கூகுள் நிறுவனத்துக்கு நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் போட்டிகளுக்கான ஒழுங்குமுறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவனத்தின் பிரான்ஸ் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது மிகவும் அதிருப்தி அளிக்கிறது. எங்களுடைய தளத்தில் செய்தி உள்ளடக்கங்களை உபயோகிப்பதற்கான உண்மை நிலவரம் அல்லது அதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவதை பிரதிபலிக்கும் வகையில் அபராதம் இல்லை. ஒரு தீர்வை அடைவதற்கான முயற்சிகளில் நல்ல நம்பிக்கையுடன் சில வெளியீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது,” என்று கூறப்பட்டுள்ளது.

கூகுள் மற்றும் இதர இணைய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் செய்தி வெளியீட்டாளர்கள் மேற்கொள்ள வேண்டிய ஒப்பந்தங்களுக்கான முயற்சிகளில் ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஈடுபட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.