29.4 C
Chennai
November 30, 2021
முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

பிரபல இந்தி நடிகை மினு மும்தாஜ் காலமானார்

பிரபல இந்தி நடிகை மினு மும்தாஜ் (Minoo Mumtaz) உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79.

பிரபல இந்தி நடிகை மினு மும்தாஜ். 1950 மற்றும் 60 களில் இந்தி படங்களில் நடித்து வந்த இவர், சிறந்த நடனக் கலைஞரும் கூட. பல படங்களில் நடனக் காட்சிகளிலும் நடித்துள்ளார். ’முகல் ஏ ஆசம்’ படத்தில் இடம் பெறும், ஜப் ராத் ஹே ஹைசி மத்வாலி என்ற பாடலில் இவருடைய நடனம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இதே போல, நயா தவுர் படத்தில், ரேஷ்மி சல்வார் குர்தா ஜலிகா என்ற பாடல் உட்பட் பல்வேறு படங்களில் இவர் நடனம் வரவேற்பைப் பெற்றது.

பழம்பெரும் இந்தி திரைப்பட காமெடி நடிகரான மெஹமூத்தின் சகோதரியான இவர், கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல் நலப் பிரச்னை இருந்து வந்தது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

அவர் கேன்சருக்கு சிகிச்சை பெற்றுவந்தார் என்று அவர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நடிகை மினுவின் கணவர் அலி அக்பர். இவர்களுக்கு ஒரு மகன், மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். மினுவின் மறைவை ஒட்டி திரையுலகினர் சமீக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

அதிமுக தேர்தல் அறிக்கைக்கு ராமதாஸ் வரவேற்பு!

Gayathri Venkatesan

மமதாவின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்!

Sathis Sekar

டி ஷர்டாக மாறும் பிளாஸ்டிக் பாட்டில்கள், வருமானம் ஈட்டும் நிறுவனம்!

எல்.ரேணுகாதேவி