முக்கியச் செய்திகள் சினிமா

செம ஸ்டைலா, கெத்தா.. ’அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக்கில் அசத்தல் ரஜினி

ரஜினிகாந்த் நடித்துள்ள ’அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளி யிடப்பட்டுள்ளது.

‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் படம் ’அண்ணாத்த’. ’சிறுத்தை’ சிவா இயக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன், குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை, லக்னோ, கொல் கத்தா பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. டி.இமான் இசையமைக்கிறார்.

இந்தப் படம் நவம்பர் 4 ஆம் தேதி, தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு இன்று வெளி யிடப்பட்டது. அதில் ரஜினிகாந்த் வேட்டி, சட்டையுடன் செம ஸ்டைலாக மேலே பார்த்தபடி போஸ் கொடுக்கிறார். மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரும் வெளியாகும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ’அண்ணாத்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

குடிபோதையில், தன் வீட்டையே தீ வைத்து கொளுத்திய காவலர்!

Jayapriya

மு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழா: 200-க்கும் குறைவான பிரமுகர்களை அழைக்கத் திட்டம்!

Halley karthi

வேளாண்துறையை மேம்படுத்த புதிய யுக்தி; முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

Halley karthi