பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு புறப்பட்டுச் சென்றார் ரஜினிகாந்த்!

இன்று காலை பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் டெல்லிக்கு கிளம்பி சென்றுள்ளார். பிரதமராக தொடா்ந்து 3-ஆவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவியேற்கவுள்ளாா். அவருடன் புதிய அமைச்சா்களும்…

இன்று காலை பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் டெல்லிக்கு கிளம்பி சென்றுள்ளார்.

பிரதமராக தொடா்ந்து 3-ஆவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவியேற்கவுள்ளாா். அவருடன் புதிய அமைச்சா்களும் பதவியேற்கவுள்ளனா். தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் இரவு 7.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது. நாட்டில் தொடா்ந்து மூன்றுமுறை பிரதமரான முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை மோடி தற்போது ‘சமன்’ செய்யவிருக்கிறாா்.

அண்மையில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. 240 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது. பதவியேற்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தில்லி புறப்படும் முன் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மோடி பதவியேற்பு விழாவுக்காக தில்லி செல்கிறேன். நேருவுக்கு பிறகு 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கிறார். மோடி 3வது முறை பிரதமராக பதவியேற்பது அவரின் சாதனை என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.