#Rajinikanth உடல்நிலை | தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம்!

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்திலும்…

rajinikanth, hospital, tamilnadu, actor

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில் சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்னை காரணமாக ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு நேற்றிரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள் : INDvsBAN | இன்று கடைசி நாள் ஆட்டத்தில் வெல்லுமா இந்தியா? பரபரப்பான கட்டத்தில் கான்பூர் டெஸ்ட் போட்டி!

நடிகர் ரஜினி காந்த்திற்கு இன்று காலை சிறப்பு சிகிச்சை மற்றும் உடல் பரிசோதனை செய்யப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.