சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது. KH-RK படத்திற்கு நடிகர் எஸ்.ஜெ. சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். என்று பெயர் தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். மேலும் இப்படத்திற்கு அனிரூத் இசைமைக்கிறார்.
45 ஆண்டுகளுக்கு பின் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிப்பதால் இப்பத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அண்மையில் இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் KH-RK படத்திற்கு நடிகர் எஸ்.ஜெ. சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். படம் குறித்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வெளியிட்டுள்ள பதிவிற்கு பதிலளித்துள்ள எஸ்.ஜே. சூர்யா, “ஆஹா…! என்ன ஒரு ஐகானிக் தருணம். ரெண்டு டைக்கூன்ஸும் ஒண்ணா நடந்து வர்றது கண் கொள்ளா காட்சி. நெல்சன் திலீப்குமார், என்ன ஒரு ப்ரசண்டேஷன் சார். அனிரூத் நீங்க எப்போதும் ராக்ஸ். ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஒரு பெருமையான தருணத்தை உருவாக்கியுள்ளீர்கள்”
என்று தெரிவித்துள்ளார்.







