ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தன்னலமற்ற பொதுச்சேவை அவரை காப்பாற்றும் என அவரது மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆந்திர அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 371 கோடி ரூபாய் வரை ஊழல் புரிந்ததாக அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சிஐடி காவல்துறை செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்தது. அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்து தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கடையடைப்பு நடைபெற்றது.
இந்நிலையில், சந்திரபாபு மகனை நாரா லோகேஷிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். அப்போது தன்னலமற்ற பொதுச்சேவை சந்திரபாபு நாயுடுவை காப்பாற்றும்
எனது நண்பர் சந்திரபாபு நாயுடு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுபவர். சட்டவிரோத கைது அவரை ஒன்றும் செய்யாது. எனவே, நீங்கள் தைரியமாக இருங்கள். எனது அருமை நண்பரான சந்திரபாபு நாயுடு தவறு செய்ய மாட்டார். அவரது நற்செயல்களும், தன்னலம் அற்ற பொது சேவையும் பத்திரமாக வெளியே கொண்டு வரும்” என நம்பிக்கை அளித்து உள்ளார்.







