தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்-வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையிலும் அதன் புறநகரிலும் இன்று பலத்த மழை பெய்தது. சில இடங்களில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை தொடர்ந்து பெய்தது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன்…

சென்னையிலும் அதன் புறநகரிலும் இன்று பலத்த மழை பெய்தது. சில இடங்களில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை தொடர்ந்து பெய்தது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து  கூறியதாவது:

தென்மேற்கு பருவமழை, தமிழகம் மற்றும் புதுவையில் தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. எட்டு இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களிலும்  லேசானது முதல்  மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழகம் மட்டும் புதுவையில் தென்மேற்கு பருவமழை 93 சதவீதம் இயல்பை விட அதிகமாகப் பதிவாகியுள்ளது.

120 ஆண்டுகளில் மூன்றாவது அதிகபட்ச மழை இதுவாகும். கடந்த 24 மணி நேரத்தை பொருத்தவரை சென்னையில் மிதமான மழை பெய்து வருகிறது.

1909 ஆம் ஆண்டில் 127 சதவீதமும், 1906 ஆம் ஆண்டில் 112 சதவீதமும் நிகழாண்டில் 93 சதவீதமும் மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதம் மட்டும் 120 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு 93 சதவீதம் மழை அதிகமாகப் பதிவாகியுள்ளது. 18 மாவட்டங்களில் 100 சதவீதம் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகி உள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.