#RainAlert – அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையின் வேகம் குறைந்து, பெரும்பாலான பகுதிகளில் கடந்த…

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழையின் வேகம் குறைந்து, பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்படுகிறது. எனினும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மழை  தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கரூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.