#RainAlert | அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து…

rainalert-chance-of-rain-in-4-districts-for-the-next-3-hours

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில தினங்களாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் செப்டம்பர் 7ம் தேதி வரை மழை தொடரும என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி, மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.