இரவு 10 மணி வரை 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று (நவம்பர் 5) இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து, கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்புள்ள 26 மாவட்டங்கள்!

இன்று (நவம்பர் 5) இரவு 10 மணி வரை செங்கல்பட்டு, சென்னை, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 26 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், புதுச்சேரி பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழையுடன் லேசான இடி மற்றும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.