ரயில்வே மக்களின் சொத்து. உங்களின் சொத்தல்ல, யாருக்கும் தாரைவார்க்க என சு.வெங்கடேசன் எம்.பி காட்டமாக ட்விட் செய்துள்ளார்.
இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரயில், கோவையிலிருந்து தனது முதல் சேவையை வரும் 14-ஆம் தேதி தொடங்குகிறது. அதேபோல மற்றொரு ரயில் வரும் ஜூன் 21-ஆம் தேதி டெல்லியிலிருந்து புறப்பட்டு நேப்பாள் நாட்டில் நுழைந்து 12 முக்கிய ராமர் ஸ்தலங்களில் பயணிக்கவிருக்கிறது. இது முழுக்க முழுக்க தனியார் சார்பில் இயக்கப்படுகிறது.
கோவையிலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், திருப்பூருக்கு 7 மணிக்கும், ஈரோட்டிற்கு 8 மணிக்கும், சேலத்திற்கு 9.15 மணிக்கும் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 15.6.2022 அன்று ஜோலார்பேட்டையில் இரவு 00.10-க்கும் எலகங்காவில் அதிகாலை 5 மணிக்கும், தர்மாவரம் 6.20, மந்த்ராலயம் ரோடு 11.00 மணிக்கும், மாலை 4.00 மணிக்கு மந்த்ரா ரோட்டிலிருந்து புறப்பட்டு வாடி இரவு 7.15க்கும் சென்றடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் முதல் தனியார் ரயில்
கோவையிலிருந்து சீரடிக்கு !இரயில்வே அமைச்சர் சென்னையில் பேசியது
அத்தனையும் பொய்யா?இரயில்வே நிர்வாகமே உத்தரவை திரும்பப்பெறு.
ரயில்வே மக்களின் சொத்து. உங்களின் சொத்தல்ல, யாருக்கும் தாரைவார்க்க. 1/2#Private #Railway #Coimbatore #Seeradi pic.twitter.com/1mmXvye0hS
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 11, 2022
அதனைத்தொடர்ந்து, 16.6.2022 அன்று காலை 7.25க்கு சாய் நகர் ஷீரடியை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மறுநாள் 17.6.2022 அன்று காலை 7.25க்கு சாய் நகர் ஷீரடியிலிருந்து புறப்பட்டு, கோவைக்கு வந்து சேரும் என தெற்கு ரயில்வே தலைமை அலுவலக கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தனியார் ரயில் – சு. வெங்கடேசன் எம்.பி ட்வீட்https://t.co/WciCN2SiwX | #PrivateTrain | #Railways | @GMSRailway | @SuVe4Madurai | @AshwiniVaishnaw | #News7Tami pic.twitter.com/5HGbnRO21m
— News7 Tamil (@news7tamil) June 11, 2022
இந்நிலையில், மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ள ட்விட்டர் பதிவில், ‘ரயில்வே அமைச்சர் சென்னையில் பேசியது அத்தனையும் பொய்யா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ரயில்வே நிர்வாகமே உத்தரவைத் திரும்பப்பெறு எனத் தெரிவித்துள்ள அவர், ரயில்வே மக்களின் சொத்து. உங்களின் சொத்தல்ல, யாருக்கும் தாரைவார்க்க எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
முதல் பயணத்திலே பக்தர்களுக்கு மூன்று மடங்கு கட்டணம்.
உங்களுக்கு இருப்பது ஆன்மீகத்தின் பக்தியுமல்ல, தேச பக்தியுமல்ல… தனியார் பக்தி மட்டுந்தான். 2/2 @GMSRailway
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 11, 2022
முதல் பயணத்திலே பக்தர்களுக்கு மூன்று மடங்கு கட்டணம் எனக் கூறியுள்ள எம்.பி.சு.வெங்கடேசன், உங்களுக்கு இருப்பது ஆன்மீகத்தின் பக்தியுமல்ல, தேச பக்தியுமல்ல, தனியார் பக்தி மட்டுந்தான் என அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







