முக்கியச் செய்திகள் உலகம்

பிரபல பாடகியின் 3வது திருமணம் – வாழ்த்த வந்த 2வது கணவர் கைது

அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் நேற்று 3வது திருமணம் செய்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்து கூற வந்த அவரது 2வது கணவர் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டார்.

அமொிக்காவை சோ்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ். 40 வயதான இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தனது நண்பரான 28 வயது சாம் அஸ்காாியை காதலித்து 3வது முறையாக திருமணம் செய்து கொண்டாா். இவா்களது திருமணம் கலிபோா்னியாவில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பிரிட்னி ஸ்பியர்சின் 2-வது கணவா் ஜேசன் அத்துமீறி நுழைந்தாா். அவரது இன்ஸ்டாகிராமில் வைவ் செய்தாா். அப்போது, அங்கிருந்த பாதுகாவலா்கள் உடனே அவரை தடுத்து நிறுத்தினா். இந்த திருமணத்திற்கு அவா் அழைக்கப்படாததால் அவரை அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


ஆனால், பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னை அழைத்ததாகவும், வாழ்த்து கூற வந்திருப்பதாகவும் ஜேசன் வாக்குவாதம் செய்தாா். இருந்த போதிலும் அவரை போலீசாா் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது சிறுவயது நண்பரான ஜேசனை கடந்த 2004-ம் ஆண்டில் திருமணம் செய்தாா். ஆனால் அவா்கள் 55 மணி நேரம் மட்டுமே சோ்ந்து வாழ்ந்தனா். ஜேசன் தன்னை புாிந்து கெள்ளவில்லை என கூறி பிரிட்னி ஸ்பியர்ஸ் அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் கெவின் என்பவரை திருமணம் செய்த பிரிட்னி ஸ்பியர்ஸ், 2007ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடதக்கது.

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இடைத்தேர்தல் வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்?-அதிமுகவில் புதிய சர்ச்சை!

Web Editor

அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று வெளியாகும் என தகவல்!

Jeba Arul Robinson

சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் இடமாற்றம் – அமைச்சர் அதிரடி உத்தரவு

EZHILARASAN D