பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வேண்டி பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வேண்டி பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, இந்தியாவின் எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது, குறிப்பாக புனே, புஞ்ச் ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டன. இந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை அண்மையில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பார்மையிட்டு நலம் விசாரித்தார்.

இந்த நிலையில் புஞ்ச் உள்ளிட்ட பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வேண்டி பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “சமீபத்தில் நான் புனேவுக்குச் சென்றிருந்தேன், அங்கு 4 குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

இந்த திடீர் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல் பொதுவான பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், பள்ளிகள் மற்றும் மதத் தலங்கள் மோசமாக சேதமடைந்தன. பாதிக்கப்பட்டவர்களின் பல வருட கடின உழைப்பு ஒரேடியாக வீணாகிவிட்டது.

புஞ்ச் மற்றும் பிற எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பல தசாப்தங்களாக அமைதியுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இந்த ஆழமான நெருக்கடியைக் கடந்து செல்லும்போது, ​​அவர்களின் வலியைப் புரிந்துகொண்டு அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து உதவிகளையும் வழங்குவது நமது கடமையாகும். பாகிஸ்தானின் தாக்குதலால் பகுதிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் உறுதியான மற்றும் தாராளமான நிவாரணம் கொடுக்குமாறு இந்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.