முக்கியச் செய்திகள் தமிழகம்

நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி நடைபெறாமல் உள்ள ஊரக உள்ளாட்சி அக்டோபர் 6, மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.

இதையடுத்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் பட்டியலில் 7 தொகுதிகளில் மாவட்ட உறுப்பினர் மற்றும் ஒன்றிய உறுப்பினர் பதவிகளில் போட்டியிடுவோர் பெயர் இடம் பெற்றுள்ளன.

அதில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் 20 பேரும், காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் தொகுதியில் 9 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் 32 பேரும், வேலூர் மாவட்டம் வேலூர் தொகுதியில் ஒருவரும், காட்பாடி தொகுதியில் 8 பேரும், குடியாத்தம் தொகுதியில் 6 பேரும், ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை தொகுதியில் 17 பேர் என மொத்தம் 92 வேட்பாளர்களுடைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கோடநாடு வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் செப்டம்பர் 7ல் விசாரணை

Saravana Kumar

சொமாட்டோ ஊழியரை தாக்கியதாக கூறப்படும் பெண் தலைமறைவா?

Saravana Kumar

T23 புலியை பிடிக்கும் பணி 20 ஆவது நாளாக தொடர்கிறது

Halley karthi