AltNews ஊடக நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் பத்திரிகையாளருமான முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
AltNews ஊடக நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் பத்திரிகையாளருமான முகமது ஜுபைர் நேற்று (ஜூன் 27) டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கடந்த 2018ல் டிவிட்டரில் அவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று மதத்தினை இழிவு செய்வதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 153/295 IPC பிரிவின் கீழ் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Every person exposing BJP's hate, bigotry and lies is a threat to them.
Arresting one voice of truth will only give rise to a thousand more.
Truth ALWAYS triumphs over tyranny. #DaroMat pic.twitter.com/hIUuxfvq6s
— Rahul Gandhi (@RahulGandhi) June 27, 2022
இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில், பாஜகவின் பொய், வெறுப்பு மற்றும் மதவெறியை அம்பலப்படுத்துபவர்களுக்கான அச்சுறுத்தல்தான் இந்த கைது நடவடிக்கை என்று கூறியுள்ளார்.
மேலும், உண்மையின் ஒரு குரலை செய்வது ஆயிரம் குரல்களை எழுப்பும் என்றும், உண்மை எப்போதும் வெற்றி பெரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
India’s few fact-checking services, especially @AltNews, perform a vital service in our post-truth political environment, rife with disinformation. They debunk falsehoods whoever perpetrates them. To arrest @zoo_bear is an assault on truth. He should be released immediately.
— Shashi Tharoor (@ShashiTharoor) June 27, 2022
முன்னதாக காங். எம்.பி சசிதரூர் இந்த கைது நடவடிக்கை உண்மையின் மீதான தாக்குதல் என்று விமர்சித்தார். உடனடியாக முகமது ஜுபைரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.








