கொரோனா உயிரிழப்புகள் 2 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதற்கு மத்திய அரசு எந்தவித பொறுப்பும் ஏற்கவில்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 1.8 கோடியை கடந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 2 லட்சத்தை கடந்துள்ளது.
இதுதொடர்பாக, தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, கொரோனா இரண்டாவது அலையின் 4-வது வாரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு, பூஜ்ஜியம் பொறுப்பேற்பின்மை என்றும், இந்த அமைப்பு தன்னிறைவு பெற்றது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.







