“மீண்டும் ராகவன்” – ரீ ரிலீஸ் ஆகும் வேட்டையாடு விளையாடு; பார்ட் 2 எப்போது?…

‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தான்…

‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தான் “வேட்டையாடு விளையாடு”. இப்படத்தில் கமலுடன் கமலினி முகர்ஜி, ஜோதிகா, டேனியல் பாலாஜி, பிரகாஷ் ராஜ் போன்றோர் நடித்திறுதனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் கவுதம் மேனனிடம் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவந்தனர். கவுதம் மேனன் வேட்டையாடு விளையாடு பாகம் இரண்டிற்கான கதை வைத்திருப்பதாகவும் அது குறித்து பேச்சுவார்த்தையை நடத்திவருவதாகவும் தகவல்கள் வெளிவந்தது.

ஆனால், இத்தகவல் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகியும் இதற்கான முன்னெடுப்புகள் ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் ரசிகர்கள் தொடர்ந்து இயக்குனர் கவுதமிடம் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் குறித்துப் பல முறை கேட்டுவந்தனர்.

ஆனால் லாக்டவுன், தேர்தல் எனப் பல காரணங்களால் கமலிடம் வேட்டையாடு விளையாடு கதை குறித்து கவுதம் மேனன், கமலிடம் பேச இயலாமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் விக்ரம் படம் மூலம் கமல் திரையுலகிற்கு மாபெரும் வெற்றியோடு கம் பேக் கொடுத்தார்.மேலும் அடுத்தடுத்த பட அறிவிப்புகளை அளித்துத் திரை ரசிகர்களை ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இதையடுத்து,  கவுதம் மேனன்சிம்புவை வைத்து “வெந்து தணிந்தது காடு” எனும் படத்தை இயக்கி வெளியிட்டார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன்,  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே “வேட்டையாடு விளையாடு-2” பட்டதிற்கான கதையைக் கேட்டு என் சம்மதத்தை கவுதமிடம் தெரிவித்துவிட்டேன். ஆனால் இடையில் கொரோனா வந்து விட்டது. எனவே முழுக்கதை என்னை வந்தடையவில்லை என்றார்.

பின்னர் நிகழ்ச்சியிலேயே விளக்கமளித்த இயக்குநர் கவுதம் மேனன், “வேட்டையாடு விளையாடு-2” பட்டதிற்கான கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கிறார் என்றும் முழுக்கதையும் விரைவில் கமல்ஹாசனுக்கு வந்து விடும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் வரும் ஜூன் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.