#LSGvsPBKS : அரைசதம் அடித்த குவின்டன் டி காக்… பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு…

ஐபிஎல் தொடரின் 11-வது போட்டியாக பஞ்சாப் அணிக்கு எதிராக பேட்டிங்கிங் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்தது. எனவே பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2024-ம்…

ஐபிஎல் தொடரின் 11-வது போட்டியாக பஞ்சாப் அணிக்கு எதிராக பேட்டிங்கிங் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்தது. எனவே பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்று (மார்ச் 30) தொடரின் 11வது போட்டி லக்னோவின் எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

கே.எல்.ராகுலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் வெகுநேரம் விளையாட முடியாது என்பதால் லக்னோ அணியின் கேப்டனாக நிகோலஸ் பூரன் செயல்பட்டார். தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும், டி காக்கும் களமிறங்கி விளையாடினர். இம்பாக்ட் வீரராக வெளியேற போகும் கே.எல்.ராகுல் தொடக்கத்தில் அதிரடி காட்டினார். ஆனால், அவர் 9 பந்துகளில் வெறும் 15 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய தேவதூத் படிக்கல் மிகவும் மோசமாக விளையாடி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் டிகாக்கும், பூரனும் நின்று அதிரடி காட்டி மெல்ல ஸ்கோரை உயர்த்த தொடங்கிய போது எதிர்பாராத விதமாக டிகாக் அரை சதம் விளாசி ஆட்டமிழந்தார். அவர் 38 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தார். அதில் 5 ஃபோர்களும், 3 சிக்ஸர்களும் அடங்கும். அதன்பின் நிக்கோலஸ் பூரன் சற்று நேரம் அதிரடி காட்டி அவரும் 21 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். இறுதி கடத்தில் லக்னோ அணிக்காக களத்தில் இருந்த குருனால் பாண்டியா அதிரடி காட்டி விளையாடினர்.

இதன் மூலம், லக்னோவ் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக டிகாக் 54 ரன்களும், பூரன் 42 ரன்களும், குருனால் பாண்டியா 43 ரன்கள் எடுத்திருந்தனர். பஞ்சாப் அணியில் அர்ஷதீப் சிங் 2 விக்கெட்டுகழும், சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினர். எனவே பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.