உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில், வங்கதேசத்திற்கு 383 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா.
உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் ஒன்றோடு ஒன்று மோதி வருகின்றன.
இந்த தொடரின் 23-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவும் வங்கதேசமும் இன்று மோதி வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களுள் ஒருவரான ரீஸா ஹென்றிக்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையும் படியுங்கள் : மீண்டும் ‘காப்பி கேட்’ சர்ச்சையில் சிக்கிய அனிருத்!… லியோ பாடலுக்கும் ‘பீக்கி ப்ளைண்டர்ஸ்’ தொடருக்கும் என்ன சம்பந்தம்?
2 விக்கெட்டுகள் இழப்பிற்கு பின்னர் நிதானமாக விளையாடிய டி காக் மற்றும் மார்க்ரம் கூட்டணி 137 பந்தில் 131 ரன்கள் குவித்தது. ஆரம்பம் முதல் நிதானமாக விளையாடி வந்த குவிண்டன் டி காக் 140 பந்துகளில் 174 ரன்கள் விளாசி, ஹசன் முகமது பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிக் கிளாசன் 49 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்த தென்னாப்பிரிக்க அணி 382 ரன்கள் குவித்தது. இதையடுத்து 383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்குகிறது.







