கோலாகலமாக நடைபெற்ற பி.வி.சிந்து திருமண வரவேற்பு விழா… குடும்பத்துடன் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய நடிகர் அஜித்!

பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண வரவேற்பு விழாவில், குடும்பத்துடன் கலந்துகொண்டு நடிகர் அஜித் மணமக்களை வாழ்த்தினார். இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக வலம் வருபவர் பி.வி. சிந்து. உலக பேட்மிண்டன் அரங்கில் ஏராளமான…

பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் திருமண வரவேற்பு விழாவில், குடும்பத்துடன் கலந்துகொண்டு நடிகர் அஜித் மணமக்களை வாழ்த்தினார்.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக வலம் வருபவர் பி.வி. சிந்து. உலக பேட்மிண்டன் அரங்கில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ள இவர், இந்தியாவுக்காக 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். 

இந்நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஐதராபாத்தைச் சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிவி. சிந்து –  வெங்கட தத்தா சாய் ஆகியோரது திருமணம் ஏற்கனவே அறிவித்த படி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இரு குடும்பத்தினரும், சில முக்கிய விருந்தினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நேற்று வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.