இன்ஜின் வெடிப்பால் கடலில் மூழ்கிய ரஷ்ய சரக்கு கப்பல் – 14 பேர் உயிருடன் மீட்பு!

ரஷ்ய அரசுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று இன்ஜின் வெடிப்பால் மத்திய தரைக்கடலில் மூழ்கியது. ரஷ்ய அரசுக்கு சொந்தமான ‘உர்சா மேஜர்’ என்ற சரக்கு கப்பல் கிரேன்களை ஏற்றிக்கொண்டு 16 பயணிகளுடன், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்…

இன்ஜின் வெடிப்பால் கடலில் மூழ்கிய ரஷ்ய சரக்கு கப்பல் - 14 பேர் உயிருடன் மீட்பு!

ரஷ்ய அரசுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று இன்ஜின் வெடிப்பால் மத்திய தரைக்கடலில் மூழ்கியது.

ரஷ்ய அரசுக்கு சொந்தமான ‘உர்சா மேஜர்’ என்ற சரக்கு கப்பல் கிரேன்களை ஏற்றிக்கொண்டு 16 பயணிகளுடன், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள விளாடிவோஸ்டோக்கிற்கு கடந்த டிச.11ஆம் தேதி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் அல்ஜீரியாவிற்கும் ஸ்பெயினுக்கும் இடையில் மத்திய தரைக்கடலில், திடீரென கப்பலின் இன்ஜின் வெடித்துள்ளது. இதனால் கப்பல் நீரில் மூழ்கியுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரஷ்ய பாதுகாப்பு குழுவினர் 16 பேரில் 14 பேரை மீட்டுள்ளனர். மற்ற இருவரும் கப்பல் மூழ்கியதும் கடலில் குதித்ததாக கூறப்படுகிறது. 14 பேர் மீட்கப்பட்டு ஸ்பெயினுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், 2 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. என்ஜின் அறை வெடித்ததற்கு என்ன காரணம் என்று தெரிவிக்கவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.