காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறான கருத்து: தமிழிசை சௌந்தரராஜன்!

காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறான கருத்து என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில்…

காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறான கருத்து என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னா் இக்கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு செயல்படுத்தபடும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காரைக்கால் புறக்கணிக்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறான கருத்து. காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. காரைக்காலின் வளர்ச்சி எந்த வகையிலும் தடைபடாது, புறக்கணிக்கப்படாது.

காரைக்காலுக்கு மருத்துவர், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணி அமர்த்தபட்டாலும் அவர்கள் காரைக்காலுக்கு வர அச்சப்படுகிறார்கள். அதற்கு நிரந்தரவு தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.