’மோடியுடன் நேரடியாக மோதமுடியாமல் ஆளுநரிடம் மோதுகிறார்’ – முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்த கிருஷ்ணசாமி

தமிழக முதல்வர் நேரடியாக மோடியிடம் மோத முடியாது, மோதினால் மத்திய அரசு திட்டங்கள் எதுவும் கிடைக்காது, இதனால் ஆளுநரிடம் மோதுகிறார் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில்…

தமிழக முதல்வர் நேரடியாக மோடியிடம் மோத முடியாது, மோதினால் மத்திய அரசு திட்டங்கள் எதுவும் கிடைக்காது, இதனால் ஆளுநரிடம் மோதுகிறார் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஒருமைப்பாட்டு  பொதுமை பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார்.

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்து கிருஷ்ணசாமி பேசுகையில்  “தமிழக முதல்வர் நேரடியாக மோடி அவர்களிடம் மோத முடியாது, ஆளும் மத்திய அரசிடம் மோத முடியாது, மோதினால் மத்திய அரசு திட்டங்கள் எதுவும் கிடைக்காது, இதனாலயே ஆளுநரிடம் மோதுகின்றனர்.புதுக்கோட் டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது மனித உரிமை மீறல்.  தமிழகத்தில் இவ்வாறு நடப்பது எந்த விதத்தில் நியாயம்?. இதில் யார் குற்றவாளி என்று கண்டுபிடிப்பதற்கு இவ்வளவு நாள் ஏன் தயக்கம்? என்று தெரியவில்லை யாரை மறைக்கிறார்கள் என்பது கேள்வி குறியாக உள்ளது என கிருஷ்ணசாமி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.