‘புஷ்பா 2’ திரைப்படத்தின் 2-ஆவது பாடல் குறித்த அப்டேட் வெளியீடு!

‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியானதை அடுத்து அத்திரைப்படத்தின் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.  தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு…

‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியானதை அடுத்து அத்திரைப்படத்தின் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். 

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா.  இந்த படம் தமிழ்,  தெலுங்கு,  இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது.  கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.  இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா திரைப்படம்.

இதனையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.  ‘புஷ்பா 2 தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  சமீபத்தில் புஷ்பா 2  திரைப்படத்தின் டீசர் வெளியானது.  இதனைத்தொடர்ந்து ‘புஷ்பா புஷ்பா’ என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியானது.

இந்த நிலையில், ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.  இது தொடர்பாக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  அதில், நடிகை ராஷ்மிகா இடம்பெறும் இரண்டாவது பாடலின் அறிவிப்பு வீடியோவை நாளை காலை 11.07 மணிக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

https://x.com/PushpaMovie/status/1793154836168601719

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.