ஆளுநர் மாளிகையின் பில்லை திருப்பி அனுப்பிய ஆம் ஆத்மி அரசு

பஞ்சாபில் ஆளுநர் மாளிகை மேற்கொண்ட செலவினங்களுக்கான பில்லை அம்மாநில அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் மற்றும் அம்மாநில ஆளுநர்களுக்கிடைய ஏற்படும் மோதல் அவ்வப்போது தலைப்புச்…

பஞ்சாபில் ஆளுநர் மாளிகை மேற்கொண்ட செலவினங்களுக்கான பில்லை அம்மாநில அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் மற்றும் அம்மாநில ஆளுநர்களுக்கிடைய ஏற்படும் மோதல் அவ்வப்போது தலைப்புச் செய்திகளை ஆக்கிரமிப்பதுண்டு. அந்த வகையில் டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் அம்மாநில ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் இடையே மோதல் சமீபகாலங்களில் அதிக பரபரப்பு ஏற்படுத்தியவை. வி.கே.சக்சேனா மாநில அரசின் கலால் வரி கொள்கைக்கு எதிராக அதிரடி விசாரணைக்கு சமீபத்தில் உத்தரவிட்டார். அந்த விவகாரம் டெல்லியில் ஆம்ஆத்மி, மற்றும் பாஜக இடையே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் ஆம் ஆத்மி ஆளும் மற்றொரு மாநிலமான பஞ்சாபிலும் அரசுக்கும் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோத்துக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருவதாக செய்திகள் வெளியாகின. இந்த சூழ்நிலையில் ஆளுநர் மாளிகை அனுப்பிய பில் ஒன்றை பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு திருப்பி அனுப்பியுள்ளதாக வெளியான தகவல் விவகாரத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 23ந்தேதி முதல் 29ந்தேதி வரை ஆளுநர் மாளிகையில் நடந்த விழா ஒன்றுக்கு ஆன செலவுத் தொகையான 8 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கான பில்லுக்கு நிதி வழங்குமாறு ஆளுநர் மாளிகை தரப்பில் கடிதம் அனுப்பபட்டதாகவும் அந்த பில்லை பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் ஆம் ஆத்மி திருப்பி அனுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு நிறைவேற்றி அனுப்பும் BILL(மசோதா)ஐ ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்புவதை கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் தற்போது ஆளுநர் மாளிகை அனுப்பிய BILL(செலவு பட்டியலை)ஐ  மாநில அரசு திருப்பி அனுப்பியதாக வெளியான தகவல் பஞ்சாபில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.