பஞ்சாப்பில் தனது கனவு வீடு இடிபடும் சூழலில், வீட்டை 500 அடி தூரத்திற்கு தூக்கி இடம் மாற்றம் செய்யும் பணியில் விவசாயி ஒருவர் ஈடுபட்டு வருகிறார்.
பஞ்சாப் மாநிலம் சங்க்ரூரில் உள்ள ரோஷன்வாலா கிராமத்தில் வசித்து வருபவர் சுக்விந்தர் சிங் சுகி. இவர் தனது கனவு வீட்டை, ஒன்றரை கோடி ரூபாய் செலவில் கட்டியிருந்தார். இந்நிலையில், புதிதாக அமைக்கப்படும் டெல்லி – அமிர்தசரஸ் – காட்ரா நெடுஞ்சாலையில் இவரது கனவு வீடும் இடிபடும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால், அரசு சார்பில் இவருக்கு இழப்பீடு தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனினும் தனது கனவு வீட்டை இழக்க மனமில்லாத சுக்விந்தர், தனது வீட்டை 500 அடி தூரத்திற்கு தூக்கிக்கொண்டு இடம் மாற்ற திட்டமிட்டார்.
அதன்படி, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 20 ஊழியர்கள் உதவியுடன், மாடி வீட்டை வேரோடு பெயர்த்து இடம்மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை 250 அடி தூரத்திற்கு வீடு நகர்த்தப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 250 அடி தூரத்திற்கு வீட்டை நகர்த்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
– இரா.நம்பிராஜன்








