பிறந்தநாள் விழாவில் கொடுத்த சாக்லேட்டில் பல்செட்.. அதிர்ச்சியில் மூதாட்டி!

மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கொடுத்த சாக்லேட்டில் பல் செட்டின் 4 பற்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர் மாயா குப்தா, தற்போது…

மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கொடுத்த சாக்லேட்டில் பல் செட்டின் 4 பற்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர் மாயா குப்தா, தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தன்னார்வலராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் பிறந்தாள் விழா ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சாக்லேட் வழங்கப்பட்டுள்ளது. அதனை சில நாட்கள் கழித்து சாப்பிட்டுள்ளார். அப்போது வாயில் எதோ தென்பட்டுள்ளது. உடனே சாக்லேட்டை வெளியே எடுத்து பார்த்தால் பல்செட்டின் 4 பற்கள் அதில் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே கார்கோனில் உள்ள உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,    “விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது, மேலும் சாக்லேட்கள் வாங்கிய கடையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும்” என தெரிவித்துள்ளார். சாக்லேட்டில் பல் இருந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.