புதுச்சேரி அரசு பள்ளியில், அடிப்படை வசதிகள் குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு செய்தார்.
புதுச்சேரியின் கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில், அடிப்படை வசதிகள்
இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட கூனிச்சம்பட்டு பகுதியில், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி, கொடாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் , துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மாணவர்களிடம் நான் யார் ? என அவர் கேட்டபோது, கவர்னர் என
மாணவர்கள் சிரித்தவாறு சொன்னதும் மகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து
மாணவர்களுக்கு உணவு பரிமாரிய அவர், மாணவர்களுக்கு சிறந்த கல்வியை
அளிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், பள்ளியில் உள்ள குடிநீர்
உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தார்.
கு. பாலமுருகன்








