வெளியானது மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணை

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணையை மருத்துவக் கல்வி இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ளது. பொது தரவரிசை 1 முதல் 10,456 வரை இடம் பெற்றுள்ள மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்…

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அட்டவணையை மருத்துவக் கல்வி இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ளது.

பொது தரவரிசை 1 முதல் 10,456 வரை இடம் பெற்றுள்ள மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு சேர்க்கையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் இன்று கலந்தாய்வு நடந்தது.

இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. எனினும், முழுமையான அட்டவணையை மருத்துவக் கல்வி இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, பொது தரவரிசை 1 முதல் 10,456 வரை இடம்பெற்றிருக்கக் கூடிய மாணவர்கள், அதாவது நீட் மதிப்பெண் 710 முதல், 410 வரை பெற்றிருக்கக் கூடிய மாணவர்கள் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

அண்மைச் செய்தி: பெத்தேல் நகர் குடியிருப்பு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு

இந்த மாணவர்கள், முப்பதாம் தேதி காலை 10 மணி முதல், மூன்றாம் தேதி மாலை 5 மணி வரை கலந்தாய்வுக்கான கட்டணம் 500 ரூபாய், தாங்கள் விரும்பும் கல்லூரிகள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் வழியில் பதிவு செய்ய வேண்டும். இதைத்தொடர்ந்து 7, 8, 9 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். மருத்துவ கல்வி இயக்குனரகம் குறிப்பிடும் மையங்களுக்கு மாணவர்கள் நேரில் சென்று உரிய சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து 12-ஆம் தேதி, முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்படுகின்றன. மாணவர்களுக்கு எந்தெந்த கல்லூரி ஒதுக்கப்பட்டு இருக்கிறது என்ற விவரம் 12-ஆம் தேதி தெரிந்துவிடும். ஒதுக்கீடு ஆணை பெறக்கூடிய மாணவர்கள், பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிக்குச் சென்று சேர வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.