முக்கியச் செய்திகள் தமிழகம்

பொதுக்குழு சலசலப்பு: ஓபிஎஸ்-ஐ நோக்கி தண்ணீர் பாட்டில் வீச்சு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த ஓபிஎஸ்ஸை நோக்கி தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒற்றைத் தலைமை சர்ச்சையைடுத்து பொதுக்குழு நிறைவடைந்த நிலையில், அடுத்த பொதுக்குழுவில் நிச்சம் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமன மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்புதல் பெற்ற 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனால் ஒற்றைத் தலைமை குறித்து புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லாமல் போனது. இது இபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பொதுக்குழுவில், 23 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. தீர்மானங்களை நிறைவேற்ற ஓபிஎஸ் முன்மொழிந்து, ஈபிஎஸ் வழிமொழிந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தீர்மானங்களையும் நிராகரிப்பதாக ஆவேசமாக கோஷம் எழுப்பினார். தொடர்ந்து கே.பி.முனுசாமியும் அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாகவும், அவர்களின் கோரிக்கை ஒற்றைத் தலைமைதான் என்றும் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அதிமுக-வில் ஒற்றைத் தலைமை வேண்டும், இரட்டைத் தலைமையை ரத்து செய்து ஒரே தலைமையின்கீழ் கொண்டு வருவது பற்றி இங்கு விவாதித்து முடிவு செய்ய வேண்டும் என்றும், அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கான தேதியையும் இப்போதே முடிவு செய்ய வேண்டும் என்றும் கோரி பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை சி.வி.சண்முகம் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேனிடம் வழங்கினார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ் மகன் உசேன் உரையாற்றுகையில், பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11ம் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெறும் என்று அறிவித்தார்.

மீண்டும் பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் மேடையில் இருந்து எழுந்து, பொதுக்குழுவைப் புறக்கணித்துவிட்டுக் கிளம்பினர். பொதுக்குழு கூட்டத்தில் இருந்து மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர். பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்த ஓபிஎஸ்ஸை நோக்கி தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- துரைமுருகன் அறிவிப்பு

Saravana Kumar

ரூ. 700 கோடி மதிப்பிலான அமெரிக்காவின் மருத்துவ உபகரணங்கள் இந்தியா வருகை!

Gayathri Venkatesan

பேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Gayathri Venkatesan