29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட ஓசன்சாட்-3 செயற்கைகோள்

அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைகோளான ஓசன்சாட்-3 செயற்கைகோளை பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஏவு தளத்தில்  25 மணி 30 நிமிட நேர கவுன்டவுணுக்கு பின்னர், இன்று காலை 11 மணி 56 நிமிடத்திற்கு பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

44.4 மீட்டர் நீளமுள்ள அந்த ராக்கெட் மொத்தம் 9 செயற்கைகோள்களை சுமந்து சென்றது. ஓசன்சாட் வகை செயற்கைகோள்களில் 3ம் தலைமுறை அதிநவீன செயற்கைகோளான ஓசன்சாட்-3 செயற்கைகோள் மற்றும் 8 நானோ செயற்கைகள் பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் விண்ணில் சீறிப்பாய்ந்தன.

ராக்கெட் புறப்பட்ட 17வது நிமிடத்திலிருந்து ஓசான்சாட்-3 உள்பட ஒவ்வொரு செயற்கைகோளாக வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. ஓசன் சாட்-3 செயற்கைகோள்  கடல் பகுதிகளில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றங்களை துல்லியமாக அறியக்கூடியது என்பதால் வானிலை மாற்றங்களை துல்லியமாக கண்டறிந்து அறிவிக்க பெரும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.  9 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading