2-வது நாளாக நீடிக்கும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் – சேலத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக பால் விநியோகம்!

சேலத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்களுக்கு பாலை இலவசமாக வழங்கினர். ஆவின் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டா் பசும்பாலுக்கு ரூ.42, எருமைப் பாலுக்கு…

சேலத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள், பொதுமக்களுக்கு பாலை இலவசமாக வழங்கினர்.

ஆவின் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டா் பசும்பாலுக்கு ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.51 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் நலச்சங்கத்தினர் நேற்று முதல் ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சேலத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பால் உற்பத்தியாளர்கள், சேலம் பால் கூட்டுறவு சங்கத்திற்கு பால் வாங்க வந்த பொதுமக்களுக்கு இலவசமாக பால் வழங்கி தங்களது போராட்டத்தை தீவிரப்பபடுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.