பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், புதிய கட்டமைப்பு வசதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தை , நவீன முறையில் வடிவமைத்திருக்கிறது பள்ளிக் கல்வித்துறை. தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் தரும் அரசு என்பதை தன் செயல்பாடுகளின் மூலம் நிரூபித்துவருகிறது. பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது. அந்தத் திட்டங்களுக்கு உறுதுணை புரியும் வகையில் , கட்டமைப்பு வசதிகளை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுப் புலம் ( Assessment cell ) , முன்னோட்டக் காட்சி அரங்கம் ( Preview theatre ) , 14417 உதவி எண்ணுக்கான அழைப்பு மையம் ஆகியவற்றை நவீன முறையில் வடிவமைத்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை.
இவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில் , இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவற்றைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பள்ளிக் கல்விக்கான அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா இ.ஆ.ப உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர் .
- பி.ஜேம்ஸ் லிசா