தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சின்னதிரை நடிகை மகாலக்ஷ்மியை இன்று எளிமையான முறையில் திருமணம் செய்தார்.
தமிழில் நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களைத் தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். சினிமா தயாரிப்பாளராக மட்டும் அல்லாமல் விமர்சகராகவும் மிகவும் இவர் மிகவும் பிரபலம். பிக் பாஸ் சீசன் 4ல் இவரது விமர்சனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களைத் தயாரித்தும், விநியோகம் செய்து வரும் இவர் சின்னதிரை நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்துள்ளார். சின்னதிரை சிரியலில் மிகப் பிரபலமான நடிகையாக மகாலக்ஷ்மி திகழ்ந்து வருகிறார். இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.
சன் டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியல் மூலம் சின்னதிரைக்குள் நுழைந்தார் மகாலட்சுமி. இதனைத் தொடர்ந்து தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் சின்னதிரை நடிகை மகாலக்ஷ்மி, தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.





