கோச்சடையான் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு சிக்கல்! காசோலை மோசடி வழக்கில் மேல்முறையீட்டிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டது!!

காசோலை மோசடி வழக்கில் கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் முரளிமனோகருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை மீண்டும் உறுதி செய்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நடிகர் ரஜினியின் கோச்சடையான் படத்தின் தமிழ்நாடு…

காசோலை மோசடி வழக்கில் கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் முரளிமனோகருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை மீண்டும் உறுதி செய்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நடிகர் ரஜினியின் கோச்சடையான் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகருக்கும், அபிர் சந்த் நாகர் என்பவருக்கும் ஒப்பந்தம் செயப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அபிருக்கு திரைப்பட தயாரிப்பாளர் முரளி மனோகர் கொடுக்க வேண்டிய தொகை ரூ. 5 கோடிக்காக அளித்த காசோலை பணமில்லாமல் திரும்பியது.

இது தொடர்பாக அபிர் சந்த் நாகர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை விரைவு நீதிமன்றம் 9% வட்டியுடன் ரூ. 7.70 கோடியை அபிர் சந்த் நாகருக்கு வழங்க வேண்டுமென முரளி மனோகருக்கு உத்தரவிட்டது. மேலும் 6 மாத சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து முரளி மனோகர் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் சென்னை விரைவு நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.