சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி மெட்ரோவில் அதிகமுறை பயணித்த 40 பேருக்கு பரிசு!

சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி அதிக முறை பயணம் செய்த மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மெட்ரோ ரயில் பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், பல்வேறு முறைகளில் தடையற்ற பயணத்தை…

சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி அதிக முறை பயணம் செய்த மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“மெட்ரோ ரயில் பயணிகளின் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், பல்வேறு முறைகளில் தடையற்ற பயணத்தை எளிதாக்குவதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்  பாரத ஸ்டேட் வங்கியின் சிங்கார சென்னை  அட்டையோடு (NCMC) சராசரி நிலைக் கட்டணத்தை ஒருங்கிணைத்தது. தேசிய பொது இயக்க அட்டை கட்டண விகிதத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும், பயணிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி நிதி உதவியுடன் ஒரு மெகா பரிசு திட்டத்தை அறிவித்தது.

https://twitter.com/cmrlofficial/status/1751285026183057615

ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2024 இல் சிங்கார சென்னை அட்டையை அதிக முறை பயன்படுத்தி பயணம் செய்த மெட்ரோ ரயில் பயணிகளில் தலா 40 பயனர்களை அடையாளம் கண்டு வெகுமதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த முயற்சி.   சென்னை திரு.வி.க.பூங்கா, செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், டிசம்பர் 15 முதல் ஜனவரி 14 வரை அதிகமுறை பயணம் செய்த 40 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பரிசுகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மு.அ. சித்திக், வழங்கினார். முன்னதாக இந்த பரிசளிப்பு விழாவில் குமரனின் கலெக்டிவ் பேண்டுடன் பிரியங்கா என்கே ஆகியோரின் நேரடி இசை நிகழ்ச்சி இடம்பெற்றது.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.