பிரியங்கா காந்தி குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் ஹேக்?

தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  உத்திரபிரதேசத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர்களது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள்…

தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

உத்திரபிரதேசத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர்களது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றது. இதனிடையே சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தன்னுடைய தொலைபேசி உரையாடல்களை மத்திய அரசு ஒட்டு கேட்பதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சியினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் சோதனை நடத்துவது, அவர்களது தொலை பேசிகளை ஓட்டு கேட்பது போன்றவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனது குழந்தைகள் மிராயா வத்ரா(18), ரைஹான் வத்ரா (20) ஆகியோரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்யப்படுகின்றன. மத்திய அரசுக்கு வேறு வேலை இருக்கிறதா என சந்தேகமாக இருக்கிறது. என தெரிவித்தார். இதையடுத்து மத்திய அரசு இதுகுறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.