#Tenkasi கிளை சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி – ஒரு மணி நேரத்தில் விரட்டிப்பிடித்த காவல்துறையினர்!

தென்காசி கிளை சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை, ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் இம்மானுவேல் (வயது 19). இவர் தென்காசி நகர பகுதியில்,…

Prisoner escaped from Tenkasi branch jail!

தென்காசி கிளை சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை, ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் இம்மானுவேல் (வயது 19). இவர் தென்காசி நகர பகுதியில், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கைது செய்யப்பட்டு, தென்காசி நகரப் பகுதியில் உள்ள தென்காசி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று (செப். 14) சிறையில் இருந்து இம்மானுவேல் தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக சிறைத்துறை காவலர்கள் உடனடியாக தென்காசி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து தென்காசி நகர் பகுதி முழுவதும், காவலர்கள் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு, தென்காசி நகர்ப்பகுதியில் சுற்றித் திரிந்த இம்மானுவேலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.