முக்கியச் செய்திகள் தமிழகம்

கல்வி நிலையங்களுக்கு அருகில் புகையிலை விற்றால் சிறை

கல்வி நிலையங்களுக்கு அருகில் மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்றால் சிறை என மத்திய மண்டல ஐ.ஜி அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் போதை பழக்க வழக்கத்திற்கு ஆட்படுவதை தடுக்கும் நோக்கில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை சுற்றி 100.மீ தொலைவில் இருக்கும் கடைகளில் புகையிலை விற்றால் 7 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சுற்றிக்கையின் வாயிலாக மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுத்தினால் பிணையில் வெளிவர முடியாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாட்டு இரண்டு மாதத்தில் குட்கா இல்லாத மாநிலமாக மாறும் என்றும், சட்ட விரோதமாக குட்கா விற்கும் அனைத்து கடைகளும் சீல் வைத்து மூடப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

நயன்தாராவின் த்ரில்லர் ஷூட்டிங் தொடங்கியது

Gayathri Venkatesan

வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

Jeba Arul Robinson

தீபாவளி சிறப்பு ரயில்; மந்தமான முன்பதிவு

Saravana Kumar