முக்கியச் செய்திகள் சினிமா

பிரின்ஸ் படப்பிடிப்பு ஓவர்; தீபாவளிக்கு மாஸ் என்ட்ரி கொடுக்கும் சிவகார்த்திகேயன்

பிரின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்துள்ளார். படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர்களுடன் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரேம்ஜி இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் பிரின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. மேலும் படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தாயின் சடலத்துடன் 10 நாட்கள் தங்கியிருந்த மகள்

Halley Karthik

கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகள்!

Halley Karthik

சிங்கப்பூர் விமான சேவைகளை அதிகரிக்க திமுக எம்.பி கடிதம்

EZHILARASAN D